சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது.  இதன் காரணமாக சென்னைமக்கள் நிம்மதியடைந்தனர்.

வங்கக்கடலில் உருவான குறைந்தகாற்றழுத்தம் புயலாக மாறியது.இதுநேற்று காலை தீவிர புயலாக மாறியதுடன், பிற்பகலஅதிதீவிர புயலாகமாறியது.  இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கிமீ வரை காற்றும், கனத்த மழையும்பெய்யும்என்பதால், தமிழகத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்துரு 3 நாளாக கொட்டித்தீர்த்த மழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கைகடுமையாக பாதிக்கப்பட்டது., இதற்கிடையில், செம்பரம்பாக்கம்ஏரியும் நிரம்பியதால், அதிலிருந்து வெளியேற்றப்படும்நீர் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் சென்னை மக்கள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நிவர் புயல்  புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.

தீவிர புயலாக வலுவிழந்த நிகர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது. இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. நிவர் தீவிரப் புயல் கரையைக் கடந்த நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று பலத்தகாற்று வீசி வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், புயல் பீதியில் இருத்து சென்னை மக்கள் தப்பி நிம்மதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ”புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது.

நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 18.7 செ.மீ மழையும், காரைக்காலில் 8.4 செ.மீ மழையும், சென்னையில் 8.9 செ.மீ மழையும், நாகையில் 6.2 செ.மீ மழையும் பெய்துள்ளது.” எனக் கூறியுள்ளது.