நிவர் புயல் தாக்கம் குறித்து  தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்

சென்னை: தமிழகத்தை கடந்த இரு நாட்களாக மிரட்டி வந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ள நிலையில்,  நிவர் புயலின் தாக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து , தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் விசாரித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட் பதிவிட்டுள்ளார்.

நிவர் புயல்  தொடர்பாக   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். புயலின் தாக்கம் குறித்து தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பேசியதாகவும்,  மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தேன். ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.