‘பேத்தை புயல்’ நாளை மறுநாள் ஆந்திராவில் கரையை கடக்கிறது: 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை:

‘பேத்தை புயல்’ திங்கட்கிழமை  ஆந்திராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆந்திராவில் 14 மாவட்டங்களுக்கு உயர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தை சூறையாடிய ‘கஜா’ புயலைவிட  விட அழுத்தம் அதிகமான பேத்தை புயல் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்   நாளை மறுநாள் (திங்கட்கிழமை)  ஆந்திர மாநிலம் ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 14 ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பிரகாசம் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக ஆந்திராவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓங்கோல், தங்குதுரு, சிங்கராயகொண்டா, உழவபாடு, குட்லுரு, ஜருகுமில்லி, கொத்தபட்னம், என்ஜிபாடு, சின்ன கஞ்சம், வேட்டப்பலம், சிராலா, கரீம்சேடு, குண்டகுரு, எஸ்என்படா ஆகிய மண்டலங்களில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் மேற்கு கோதாவிரி, கிழக்கு கோதாவிரி  மாவட்டங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  புயல் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனித்தனி புயல் எச்சரிக்கை உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், குண்டூரில் இலவச டோல்ஃபிரி எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

ஆந்திர புயல் அவசர உதவிக்கு:  Guntur is 1800-425-4099 and 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களை பழைய கட்டிடங்களில் தங்க வேண்டாம் என்றும், பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று விடுமாறும், மீனவர்கள் உடடினயாக கரைக்கு திரும்பவும் ஆந்திர மாநில அரசு அறிவித்து உள்ளது.

பேத்தை புயல் காரணமாக வடதமிழகத்தின் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆந்திரா , வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்  என வானிலை மையைம் அறிவுறுத்தியுள்ளது.

பேத்தை புயல் தற்போது சென்னைக்கு  730 கிமீ தொலைவில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்;  புயலாக மாறி மணிக்கு 11 கிமீ வேகத்தில் ஆந்திர கரையைக் நோக்கி நகர்ந்து வருகிறது.