ஆந்திராவின் காக்கிநாடாவில் இன்று இரவு கரையை கடக்கிறது ‘பெய்ட்டி’ புயல்

ஐதராபாத்:

ங்கக்கடலில் உருவாகி உள்ள ‘பெய்ட்டி’ புயல் ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்து ஆந்திராவை நோக்கி செல்றுகொண்டி ருக்கிறது. இந்த புயல் இன்று பிற்பகல் புயலாக வலு குறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெய்ட்டி புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படு கிறது, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பபட்டுள்ள நிலையில்,  ஆந்திராவில் 14 மாவட்டங்களுக்கு உயர் புயல் எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.

பழவேற்காட்டில், மீனவ மக்கள் மீட்கப்பட்டு, புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில், கடல் பலத்த சீற்றத்துடன் உள்ளது. படகுகள், கிரேன் உதவியுடன் இழுத்துச்சென்று பாதுகாப்பான பகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளது.

பலத்த காற்றுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  இதன் காரணமாக சுமார் 2 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழுகின்றன.

கடந்த மாதம் தமிழகத்தை சூறையாடிய ‘கஜா’ புயலைவிட  விட அழுத்தம் அதிகமான பெய்ட்டி புகழ் இன்று இரவு  ஆந்திர மாநிலம் ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காக்கிடாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  பிரகாசம் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 24 மணி அவசர உதவி தொலைபேசி வசதியும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பபட்டு உள்ளது.