மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு: பெண்கள் அதிர்ச்சி

டில்லி:

வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது பெண்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீகாலமாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையும்  வரலாறு காணாத அளவுக்கு உயர்வு பெற்றுள்ளது. இது பொதுமக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதில் இருந்தே மானிய விலை சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்க எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, சமையல் எரி வாயு விலையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டு ஒன்றுக்கு 12 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தேவைப்படின், சந்தை விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம். நாடு முழுவதும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் எரிவாயு சிலிண்டரையே நம்பி உள்ள நிலையில், தற்போது அதிரடியாக எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

தற்போது வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய  சிலிண்டரின் விலை இரண்டு ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.  டில்லியில் இதன் விலை 502 ரூபாய் 40 காசுகளாக இருந்து இப்போது 505 ரூபாய் 34 காசுகளாக ஆக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் வரி தாக்கமே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக சமையல்எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதே போன்று மானியம் இல்லாத சிலிண்டரின் விலையும் 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.டெல்லியில் இதன் விலை 880 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதன் விலை 896 ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.