தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு அ.தி.மு.க. வலை?

நியூஸ்பாண்ட்:

download (5)

“சட்டமன்றத்தில்  பெரும்பான்மையை விட 12-ஐ மட்டுமே கூடுதலாக வைத்திருக்கும் அதிமுக அதன் எம்எல்ஏக்களை தக்க வைப்பது கடினமான செயல்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

ஆனால், அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது வேறு.

தி.மு.க. எம்.எல்.ஏக்களில் சபல கேஸ்களை வளைக்க காய் நகர்த்தி வருகிறதாம் அ.தி.மு.க. தரப்பு. அது போல நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஓர் கருத்தை வெளியிட்டாராம் கருணாநிதி. அதாவது, “அ.தி.மு.க. தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலரது ஆதரவுடன் நாமே ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” என்று தன் கட்சி சபல எம்.எல்.ஏக்களுக்குத் தெரவிக்கும் விதமாகத்தான் அப்படிப் பேசினாராம் கருணாநிதி.

அதோடு, “துரோகிகளை மன்னிக்க மாட்டேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் பொங்கியதும் அந்த சபல எம்.எல்.ஏக்களை அடக்கி வைக்கத்தானாம்.

ஆனால் ஆளுங்கட்சி தனது வலையை வீசியபடியே இருக்கிறது என்கிறார்கள். பெரும் பணம் தருவதாக சிலரிடமும், வழக்குகள் வாபஸ்  வாங்கப்படும் என்பதாக சிலரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

அதோடு, கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் சில எம்.எல்.ஏக்களிடமும் தொடர்புகொண்டு பேசு வருகிறார்களாம்.

இவர்களில் இருவர் கிட்டதட்ட ஓ.கே. சொல்லிவிட்டார்களாம். நாஞ்சில் பகுதியில் வென்ற வேட்பாளரும் அவர்களில் ஒருவர். பல கட்சி பார்த்தவர் இவர்.

இன்னொருவர் கடற்கரை பகுதி எம்.எல்.ஏ. வென்றாலும், திக்கு “திசை” தெரியாமல் தவித்த இவரையும் ஓ.கே. செய்துவிட்டதாம் ஆளும் தரப்பு.

ஆனாலும், “இப்போது அவசரம் வேண்டாம். கணிசமான எம்.எல்.ஏக்கள் சேர்ந்தபிறகு, தனி அமைப்பாக இணையலாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.