தனுஷின் D43 திரைப்படம் குறித்த அப்டேட்…..!

இந்தியில் அத்ரங்கி ரே, ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என்று நடிக்கிறார் தனுஷ் .

இவை தவிர கிரே மேன் என்கிற ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2விலும் நடிக்கிறார்.

இதனிடையில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்போதைக்கு D43 என்று அழைக்கப்படும் இப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றது .