ம்பு நடிகர் சமீபத்தில் நடித்து வெளியான ட்ரிபிள் ஏ திரைப்படம், வந்த வேகத்திலேயே தியேட்டர்களைவிட்டு ஓடிவிட்டது. படம் படுதோல்வி என்பதோடு, மிக மோசமான படம் என்கிற விமர்சனத்தையும் பெற்றது.

ஏற்கெனவே வம்பு நடிகர் என்றால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத தூரம் ஓடுகிறார்கள். நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரமாட்டார், தேவையில்லாத விசயங்களி்ல் எல்லாம் தலையிடுவார் என்று வம்பு மீது பலவித புகார்கள் உண்டு.

இந்த நிலையில் படமும் அட்டர் ப்ளாப் என்றால் யார்தான் நம்பி வருவார்கள்? இதை உணர்ந்த வம்பு நடிகர், நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுவைத்திருக்கும் “தீயவன்” படத்தை தூசி தட்டலாமா என்று யோசித்தார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அவரது “அடுக்குமொழி” அப்பாதான். எல்லோரும் கைவிட்ட நிலையில் அப்பாவிடம் சரணடைந்தார் வம்பு. “அந்த தீயவன் பட வேலைகளை ஆரம்பிக்கலாம்” என்றார். அவ்வளவுதான்.. அடுக்கு அப்பா ஆவேச அப்பாவாக ஆகிவிட்டார்.

“இப்பத்தான் ஒரு பெயிலியர் படம் கொடுத்திருக்கே. அதுபத்திக்கூட எனக்கு கவலை இல்லை. படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுக்கிறது, எதிலேயும் அக்கறை இல்லாம திரியறதுன்னு விட்டேத்தியா சுத்துறே.. உன்னை நம்பி எப்படி பணம் போட முடியும்?

சினிமாவை நான் தெய்வமா பார்க்கிறேன். நீயோ விளையாட்டா நோக்குறே.. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு” என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் அடுக்குமொழி அப்பா.

எல்லோரும் புறக்கணிக்கும் நிலையில், அப்பாவும் கைவிட்டுவிட்டாரே என்ற வருத்தத்தில் இருக்கிறார் வம்பு.