அமித்ஷா பேரணிக்கு ஆட்களை அனுப்ப தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி! தாத்ரா அரசு அதிகாரியின் கடிதம் அம்பலம்

ஹவேலி:

நாளை மறுதினம் (1ந்தேதி) தாத்ராவில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் பேரணிக்கு தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்களை அனுப்ப மாநில அரசு நிர்வாகம் கடிதம் மூலம் நெருக்கடி கொடுத்துள்ளது.  தற்போது அதிகாரி அனுப்பி உள்ள கடிதம் அம்பலமாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் செப்டம்பர் 1ந்தேதி நடைபெற உள்ள அமித்ஷாவின் பேரணிக்கு ஆட்களை திரட்ட மாநில அரசு  நிர்வாகம் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டு உள்ளது. இந்த கடிதம் வெளியான நிலையில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு கடற்கரை அருகே உள்ளது இரு தனி பகுதிகளை கொண்டது. தாத்ரா மற்றும் ஹவேலி. தாத்ரா  பகுதி  குஜராத் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது மற்றும் நாகர் ஹவேலி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் எல்லைகளில் அமைந்துள்ளது.  சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வரும் 1ந்தேதி (செப்டம்பர்) பாரதிய ஜனதா கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள அமித்ஷா காதலை 11.30 மணி அளவில்  பிரமாண்ட பேரணி நடத்துகிறார்.

இந்த பேரணிக்கு தொழிற்சாலையில் பணிபுரியும்  தொழிலாளர்களை அனுப்ப வேண்டும் என்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியின் நிர்வாகம், கடிதம் மூலம் மிரட்டி உள்ளது.

மேலும், பேரணியில் அதிக அளவில் மக்களை திரட்டும் வகையில், ஒவ்வொரு தொழிற்சாலை யில் இருந்து, தொழிலாளர்களை அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை அழைத்து அணி திரட்டி அழைத்து வருவதை உறுதி செய்வதற்காக தாத்ரா மற்றும் நகர் ஹவேலியின் நிர்வாகம் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, மாநிலத்தின் கைத்தொழில்துறை  செயலாளர், கலெக்டர் மற்றும் துணை தொழி லாளர் ஆணையர் போன்றோருக்கு, தொழில்துறை இயக்குநர் கரஞ்சித் வதோதரியா, உதவி தொழிற்சாலை பொறியாளர்களை நோடல் அதிகாரிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, அமித் ஷாவின் பேரணிக்கு அழைத்து வரப்படும் தொழிற்சாலை  ஊழியர்களின் போக்கு வரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்தின் விவரங்களை சரிபார்க்க பல்வேறு தொழில் களின் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைக்க வேண்டிய சில அதிகாரிகளையும்  இயக்குனர் பட்டிய லிட்டுள்ளார்.  அவர்கள் மூலம் தொழிற்சாலைகளின்  ஊழியர்கள் பேரணி இடத்திற்கு வருவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர், அதிகாரிகளின் இந்த உத்தரவை மீறினால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும், எனவே தங்களது வேலை பாதிக்கப் படும். இதன் காரணமாக வேலையிழப்பு மற்றும் பணியிழப்பு ஏற்படும் எனவே, அமித்ஷாவின் கூட்டத்துக்கு தொழிலாளர்களை அனுப்புவதே நல்லது என்றும், அதனால்தான் மின்சாரம் மற்றும் தொழில்துறை துறையிலிருந்து இந்த உத்தரவு வந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த உத்தரவு குறித்து கூறிய அதிகாரி ஒருவர்,  எனது பகுதியிலிருந்து, குறைந்தபட்சம் 2,000 தொழிலாளர்களை நான் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும்,  அமித் ஷாவின் பேரணி, காலை 11.30 மணிக்கு இருப்பதால், நாங்கள் வழக்கமாக இரண்டாவது ஷிப்ட் மற்றும் மூன்றாவது ஷிப்ட் தொழிலாளர்களை அழைத்துச் செல்கிறோம். அவர்களின் உணவு மற்றும் தண்ணீரை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். இதுபோன்ற ஒவ்வொரு பேரணிக்கும் பல தொழிலாளர்களை ஒழுங்கமைக்குமாறு நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரணிக்கு அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட முதலாளி  உறுதி அளிக்க வேண்டும் என்றும், அதுபோல ஒவ்வொரு நிறுவனங்களிலும் இருந்து குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டுவதாக தொழிற்சாலை நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

அமித்ஷாவின் பேரணிக்காக தொழிற்சாலை ஊழியர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கப் பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும்  ஏற்படுத்தி உள்ளது.

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி இந்தியாவின் ஒரு முக்கிய யூனியன் பிரதேசமாகும். எனவே அதன் அரசாங்கம் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி அரசியல் இந்திய மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.  அரசாங்கம் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி அரசியலை ஜனதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி அல்லது துணைநிலை ஆளுநர், தலைமை தாங்கி நடத்துகிறார். அது நீண்ட காலமாக போர்த்துகீசியர் ஆட்சியிலி இருந்தது மற்றும் 1954 வருடம் தான் அத் இந்திய துணைக்கண்டத்துடன் சேர்க்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.