பாஜக பேரணியில் தாத்ரி கொலைக் குற்றவாளி : அதிர்ச்சியில் மக்கள்

பிஷாரா, உத்திரப்பிரதேசம்

தாத்ரி மாட்டுக் கறி கும்பல் கொலை வழக்கின் குற்றவாளி விஷால் சிங் பாஜக பேரணியில் முன்வரிசையில் காணப்பட்டார்.

உத்திரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ள பிஷாஹரா என்னும் ஊர் ராஜபுத்திரர்கள் அதிகம் உள்ள ஊர் ஆகும்.    இந்த பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று முகமது அக்லாக் என்பவர் 17 பேர் கொண்ட கும்பலால் தாக்கி கொல்லப்பட்டார்.  அவர் பக்ரீதை முன்னிட்டு மாட்டுகறி உண்டதாகவும் வீட்டில் பிறகு சாப்பிட மாட்டுக் கறியை வைத்திருந்ததாலும் கொல்லபட்டதாக கூறப்பட்டது.

இந்த கொலை குறித்து முக்கிய குற்றவாளியான விஷால் சிங் அந்த ஊர் கோவிலில் அறிவிப்பு செய்துள்ளார்.  அப்போது அவர் அக்லாக் மாட்டுக் கறியை உண்டதாகவும், மீதமுள்ள மாட்டுக்கறியை தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.   காவல்துறையினர் இந்த கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் 17 பேரும் கைது செய்யப்பட்டனர்.  தற்போது அனைவரும் ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிஷாஹரா வில் பாஜக பேரணி நடைபெற்றது.  இதில் உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.    இந்த பேரணியில் முன் வரிசையில் விஷால் சிங் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு இளைஞர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.   இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் சன்னாவை ஆதரித்து பேசிய யோகி, “சமாஜ்வாதி அரசு கிராம மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவமானகரமாக நடந்துள்ளது.  பாஜக அரசு அமைந்த பிறகு நாங்கள் பசு வதை செய்வதை சட்டபூர்வமாக தடை செய்துள்ளோம்.   அதனால் மாடு வெட்டும் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.