சென்னை

ணு சக்தி துறை அணு சக்தி தாது மணலை தனியார் துறை எடுக்கக் கூடாது என தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் மணல் சுரங்க சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மோனசைட் 0.75% க்கும் அதிகம் உள்ள  மணலை எடுக்க தனியாருக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவின் படி கடற்கரையில் மணல் எடுக்க தனியாருக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் இன்னும் கடற்கரையில் சில இடங்களில் மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து அணுசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கடல் அமைப்பு கல்வி நிலயம் மற்றும் இந்திய நிலவள ஆய்வு நடத்திய சோதனையில் கடற்கரையில் நான்கு இடங்களில் உள்ள மணலில் பல முக்கிய தாதுகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில்  உள்ள மணவாளக்குறிச்சியில் மொத்தமுள்ள தாத்துக்களில் மோனசைட் 1.4% முதல் 4.18% உள்ளது.

மோனசைட் மற்றும் ஜிர்கான் தாதுக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மோனசைட்டில் இருந்து யுரேனியத்தை பதப்படுத்தும் தோரியம் எடுக்க முடியும். ஜிர்கான் என்பது அணு சக்தி உற்பத்திக்கு மிகவும் முக்கிய பொருளான ஹபீனியம் என்னும் பொருளை உள்ளடக்கியதாகும். சட்டப்படி அணு சக்தி தாதுக்கள் நிரம்பிய மணலை எடுக்க அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது.

இந்த நாட்டின் கனிம வளம் நிறைந்த மணல் அரசுக்கும் மக்களுக்கும்  சொந்தமானது. இதைத் தனியார் எடுப்பது அரசு சொத்து அல்லது மக்கள் சொத்தை திருடுவது போல் ஆகும். எனவே இந்த அணு சக்தி தாது உள்ள மணலை எடுக்கத் தடை விதிக்கப்படுகிறது.” என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைப் பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.