[embedyt] https://www.youtube.com/watch?v=unUFYbfLiDY[/embedyt]

இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘டகால்டி’.

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஒரு பெங்காலி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார்.

18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.