Random image

ஒரே பாடல் மூலம் பிரபலமான கேரளா தொழிலாளி

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராகேனு நூரனாடு. ரப்பர் மரம் தூக்கும் தொழிலாளி. குடும்ப பொருளாதார நிலை காரணமாக 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்பு ரப்பர் மரங்களை லாரியில் ஏற்றிவிட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். இவர் நன்றாக பாடக் கூடியவர். அதனால் ஒய்வு நேரத்தில் இவரை பாடுமாறு சக தொழிலாளர்கள் வற்புறுத்தியுள்ளார். இவர் கூச்சப்பட்டுக் கொண்டு பாடாமல் இருந்துள்ளார். பின்னர் தொடர் வற்புறுத்தல் காரணமாக கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெறும் ‘‘உன்னை காணாது நான்’’ என்ற பாடலை பாடினார்.

இதை அவரது நண்பரும், லாரி டிரைவருமான ஷமீர் பாழகுலம் என்பவர் அவரது செல்போனில் இதை பதிவு செய்தார். பின்னர் இந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றினார். ஷமீரின் தங்கை இதை பேஸ்புக்கில் முதல் ஆளாக பகிர்ந்தார். தற்போது இந்த வீடியோ வைராகியுள்ளது.

ராகேஷை கண்டுபிடிக்க சமூக வலை தளங்களில் தேடுதல் வேட்டை நடந்தது. தற்போது ராகேஷின் செல்போன் ஒய்வின்றி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கமலின் தனிப்பட்ட உதவியாளர் ராகேஷை தொடர்பு கொண்டார். ராகேஷை சந்திக்க கமல் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு சங்கர் மகாதேவன், கோபி சுந்தர், பாலபாஸ்கர் ஆகியோர் ராகேஷை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.

உள்ளூர் மட்டுமின்றி பல மாநிலங்கள், பல நாடுகளில் இருந்தும் ராகேஷை தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.