டகால்டி First Look போஸ்டர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்தானம்…!

டகால்டி ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’ .

மும்பையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

18 ரீல்ஸ் சார்பில் செளத்ரி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வெள்ளி அன்று படக்குழுவினர் வெளியிட்டனர். போஸ்டரில் சந்தானம் புகை பிடிப்பது போன்று காட்சி இருந்தது. சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்குக்கு எதிர்ப்பு வந்த போல சந்தானத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். டகால்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டது. அது புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர். வருங்காலத்தில் இதுபோன்ற போஸ்டர் வெளியிட மாட்டோம் என்பது உறுதியுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த போஸ்டரை சந்தானம் நீக்கவில்லை.

கார்ட்டூன் கேலரி