இந்தி கற்பதில் தமிழ்நாடு முதல் இடம் : இந்தி பிரசார் சபா அறிவிப்பு !

சென்னை

ந்தி பிரசார் சபாவின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் இந்தி கற்பதில் தமிழ் மக்கள் முதலிடம் வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை தி நகரில் தென் இந்திய இந்தி பிரசார் சபா இயங்கி வருகிறது.  இந்த சபை சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “தென் இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் அதிகம் மக்கள் இந்தி கற்கிறார்கள்.  தமிழக மக்கள் சுமார் மூன்றரை லட்சத்துக்கு மேல் இந்தி கற்று வருகிறார்கள்.  இரண்டாவது இடத்தில் ஆந்திராவும், மூன்றாவது இடத்தில் கேரளாவும் உள்ளது.   கேரள மக்கள் ஏனோ இந்தி கற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை” என தெரிவித்துள்ளது.

.