தலாய் லாமா வின் இயற்பெயர் தெரியுமா ?

தலாய் லாமா என்­பது தனிநபரின் பெயரல்ல.

நமது ஊரில், காஞ்சி மடாதிபதி, மதுரை ஆதினம் போன்றே திபெத் நாட்டின் பௌத்­தர்­களின்

ஆன்மீகத் தலைவர், தலாய் லாமா  (திபெத்திய மொழியில் கடல் -குரு) என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர்.

தலாய் லாமா தேர்வு செய்­யப்­ப­டு­வ­தில்லை.  கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

1391ம் ஆண்டு முதல் தலாய் லாமாவாய்  கெண்டுன் ட்ருப்  அடையாளம் காணப்பட்டார்.  தற்போது 14 ஆவது தலாய்லாமா­வாக இருக்கும்  தலாய் லாமா­விற்கு பெற்றோர் இட்ட  பெயர் லாமோ தொண்டுப். அவரது பெற்றோருக்கு பிறந்த 16 குழந்தைகளில் ஒருவர்.  தலாய் லாமா­வாக இனங்­கா­ணப்­பட்­டதன் பின் அவரது பெயர் “டென்ஸின் கியாட்ஸோ“.

தலாய் லாமாக்கள் புத்த பெரு­மானின் அவ­தா­ரங்கள் என்றே திபெத் மக்கள் நம்­பு­கின்­றனர். . ஒரு தலாய் லாமா இறந்­ததும் அவ­ரது ஆத்மா புதி­தாக பிறந்த குழந்­தை­யொன்றின் உட­லினுள் புகுந்­து­கொள்­வ­தாக அவர்கள் நம்­பு­கின்­றனர்.

பல்­வேறு சோத­னை­களின் ஊடாக இந்தக் குழந்தை இனங்­கா­ணப்­பட்ட பின் ஊர்­வ­ல­மாக லாஸா நக­ருக்கு எடுத்துச் செல்­லப்­பட்டு சம்­பி­ர­தாய முறையில் தலாய் லாமா என்ற புனிதப் பத­வியில் அமர்த்­தப்­படும். லாஸா­வி­லுள்ள ஆயிரம் அறை­களைக் கொண்ட பொதாலா அரண்­ம­னையே தலாய் லாமாவின் வாசஸ்­த­ல­மாகும். அங்கு விலைமதிப்பற்ற தங்கம் வெள்ளி உள்ளன.

தலாய் லாமா­வுக்கு அடுத்த அந்­தஸ்­துள்ள பதவி பஞ்சன் லாமா ஆகும்.
திபெத்­தி­யர்­களைப் பொறுத்­த­வரை இவர்கள் இரு­வ­ருமே அர­சியல், ஆன்­மீகம் இரண்­டிலும்  கௌர­வ­மான உயர்­ப­தவி வகிப்­ப­வர்கள்.

ஒரு பஞ்சன் லாமா அடுத்த தலாய் லாமாவை தேர்ந்­தெ­டுப்­பதும், அந்த தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவை தேர்வு செய்­வதும் சங்­கிலித் தொடர் போல் பல­நூறு ஆண்­டு­க­ளாகத் தொடர்ந்து நடை­பெற்று வரு­வது பாரம்­ப­ரிய நடைமுறையாகும்.

தலாய் லாமா பிறந்த வீடு

1959 இல் திபெத்தின் மீது சீனா படை­யெ­டுத்து தன்­னுடன் இணைத்துக் கொண்­டது. தற்­போ­தைய தலாய் லாமா டென்சின் கியாட்சோ (24 வயது) சீன அர­சிற்குப் பயந்து வெளி­யேறி இந்­தி­யாவில் 1959ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்று தஞ்சம் புகுந்தார். அப்­போ­தைய இந்­தியப் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு அடைக்­கலம் அளித்தார். இம­ய­மலை அடி­வா­ரத்­தி­லுள்ள தரம்­சாலா என்ற இடத்தில் எல்லை தாண்டிய திபெத்­திய அரசு நிறு­வப்­பட்­டது.

சீன அரசின் எதி­ரி­யாக கரு­தப்­படும் தலாய் லாமா­வுக்கு இந்­தியா புக­லிடம் அளித்­ததை அடுத்து  1962 ஆம் ஆண்டு அக்­டோபர் 20ம் நாள் சீன இரா­ணுவம் இந்­திய எல்­லைக்குள் அத்­து­மீறி நுழைந்­தது. வேறு வழி­யின்றி இந்­தியா அமெ­ரிக்­காவின் உத­வியை நாடி­யது.

அப்­போது அமெ­ரிக்க அதி­ப­ராக இருந்த கென்­ன­டியும் உத­விக்­காக உட­ன­டி­யாக விமா­னங்­க­ளையும் ஆயு­தங்­க­ளையும் அனுப்­பு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். சீனா என்ன நினைத்­ததோ!

திடீ­ரென போரை நிறுத்­து­வ­தாக அறி­வித்­தது. போர் நிறுத்­தப்­பட்­டது. ஆனால் சீனாவால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட 33,000 சதுர கிலோ மீட்டர் பகு­தியை விட்டு அது நக­ர­வில்லை. (அந்தப் பகு­தியை இந்­தி­யா­வுக்குத் திருப்பிக் கொடுக்­காமல் இன்­றைக்கும் சீனா தனது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.) இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே நடந்த போரில் இந்­தியா படு­தோல்­வியை சந்­தித்­தது. திபெத் மற்றும் அதனை சுற்­றி­யுள்ள இந்­திய பகு­தி­களை சீனா வளைத்துக் கொண்­டது.

இதன் மூலம் திபெத்தை சுற்றி இந்­தியப் பகு­தி­க­ளையே வேலி­யாக்­கி­விட்­டது. பிர­தமர் நேரு அதிர்ந்து போனார். தலாய் லாமா தன்­னால்தான் இந்­தியா மிகப் பெரும் இழப்பை சந்­திக்க நேரிட்­ட­தாக வருந்­தினார். நேரு­விடம் நேர­டி­யா­கவே தனது வருத்­தத்தை தெரி­வித்தார்.

நேருவைத் தொடர்ந்து வந்த அனைத்து இந்­தியப் பிர­த­மர்­களும் தலாய் லாமா­வுக்கு ஆத­ர­வா­கவே இருந்து வந்­தனர்.


1989 ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி 10 ஆவது பஞ்சன் லாமா தனது 51 ஆவது வயதில் மர்­ம­மான முறையில் திடீ­ரென மர­ண­ம­டைந்தார். 
பின்னர் ஆறு வரு­டங்கள் கழித்து 1995 ஆம் மே மாதம் 14 ஆம் திகதி தலாய் லாமா, புதிய பஞ்சன் லாமா கெதும் சோகி நியிமா என்­ப­வரை நிய­மித்தார். சீன அரசு அதனை ஏற்­றுக்­ கொள்­ள­வில்லை. மாறாக தங்கள் அலு­வ­ல­கத்தில் வேலை பார்க்கும் பாது­காப்பு அதி­காரி ஒரு­வரின் மக­னான கியான்சென் நொர்பு என்­ப­வரை பஞ்சன் லாமா­வாக தேர்வு செய்­தி­ருக்­கிறோம் என சீன அரசு அறி­வித்­தது.

தலாய் லாமா­வுக்கு 1989 இல் நோபல் பரிசு வழங்­கப்­பட்­டது.
உள்­நாட்­டு- வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் 84 டாக்டர் பட்­டங்­களை வழங்கி கௌர­வப்­ப­டுத்­தின.
இது­வரை சுமார் 62 நாடு­க­ளுக்கு தலாய் லாமா சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார். 106 புத்­த­கங்கள் எழு­தி­யுள்ளார்.

தனிநாடு கோரிக்கையுடன் திபெத் மக்கள் இன்றளவும் போராடி வருகின்றனர்.  திபெத் மக்களை சீன இராணுவம்  கொன்று குவித்து வருவதைக் கண்டு மனமுடைந்த தலாய்லாமா திபெத் மக்களுக்கு சுயாட்சி கொடுத்தால் போதும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும், இந்தியா காஷ்மீரில் செய்வது போலும்,  இலங்கை யாழ்ப்பாணத்தில் செய்வது போலும், இராணுவம் கொண்டு சுயாட்சி வேண்டிப் போராடும்  மக்களை இனப்படுகொலை அல்லது  ஒடுக்குவதை இன்றும் கைவிடவில்லை. தலாய் லாமா வின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

 

தலாய் லாமா முழு  வாழ்க்கை வரலாறு அறிய (புத்தகம்): தலாய் லாமா அரசியலும் ஆன்மீகமும் . ஆசிரியர்: ஜனனி ரமேஷ்.

 

 

Leave a Reply

Your email address will not be published.