கேப்டவுன்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இப்படியே பல விளையாட்டுத் தொடர்கள் ரத்தானால், என்ன செய்வதேன்றே தெரியவில்லை எனப் புலம்பியுள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து நட்சத்திரம் டேல் ஸ்டைன்.

மதம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட விஷயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் விளையாட்டுதான் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. எங்கள் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவும்கூட இதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலைக்குச் செல்கிறோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கொரோனா காரணமாக பல விளையாட்டுத் தொடர்கள் ரத்தாகின்றன. விளையாட்டுத் துறையையே மொத்தமாக மூடியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இப்படியே சென்றால், என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை.

பாகிஸ்தான் உள்ளூர் அணிக்காக விளையாடியபோது, கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானதாக இருந்தது. இனிமேல் பாகிஸ்தானில் விளையாட மாட்டேன்.

தற்போது, விடுமுறை பொழுதுபோக்குகளைக்கூட அனுபவிக்க முடியாமல் தனிமையில் முடங்கியிருக்க வேண்டியுள்ளது. கடைகளைக்கூட விரைவில் அடைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் உள்ளனர் மக்கள்” என்றுள்ளார் ஸ்டைன்.