தோள்பட்டை வலி: ஆர்சிபி அணியில் இருந்து டேல் ஸ்டெயின் விலகல்

பெங்களூரு:

பிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த  டேல் ஸ்டெயின்  தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார். இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த பிரபல முன்னணி பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் ஐபில் தொடரில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, நடைபெற்ற போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்தார்.

சுமார் ஒராண்டு ஒய்வுக்கு பிறகு தொடர்ந்து  விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி வருகிறார்.

ஆர்சிபிக்கு எதிரான  கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்த்தார். இதற்கு காரணம் அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட வீக்கம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தோள்பட்டை வலிக்காக சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதால், ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஆர்சிபி அணியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.