சட்ட விரோத ஆட்கடத்தல் : பிரபல இந்தியப் பாடகருக்கு சிறை தண்டனை

பாடியாலா

பிரபல இந்தியப் பாடகர் தலிர் மெகந்திக்கு சட்ட விரோத ஆட்கடத்தல் வழக்கில் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் தலிர் மெகந்தி.  இவர் மீதும் இவர் சகோதரர் ஷம்ஷேர் மற்றும் அவர் உதவியாளர்கள் மீதும் கடந்த 2003 ஆண்டு பக்‌ஷிஷ் சிங் என்பவர் ஒரு புகார் அளித்தார்.   அந்த புகாரில் தலிர் மெகந்தி மற்றும் அவர் சகோதரர் தன்னை அவர்களின் குழுவில் ஒருவர் எனக் கூறி வெளிநாடு அனுப்புவதாகச் சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் பின் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஷம்ஷேர் மெகந்தி

இந்த வழக்கு பதியப்பட்டதும் மெகந்தி சகோதர்கள் மீது மேலும் பலர் இதே போல புகார் அளித்தனர்.   அதன் பிறகு காவல்துறையினர் அவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இரு மனுக்கல் அளித்தனர்.  ஆனால் அந்த இரு மனுகளையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இன்று இந்த வழக்கில் தலிர் மெகந்திக்கு பாடியலா நீதிமன்றம்  இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.    தலிர் மெகந்தியின் சகோதரர் ஷம்ஷேர் கடந்த 2017ஆம் வருடம் அக்டோபர் மாதம் இறந்து விட்டார்.   இதையொட்டி பஞ்சாப் காவல்துறை பாடகர் தலிர் மெகந்தியை சிறையில் அடைத்துள்ளது.