Random image

ஐதராபாத் ஆணவக் கொலை: முதல்வர் சந்திரசேகரராவ் மவுனம்… ஏன்?

ஐதராபாத்:

தெலங்கானாவில் தலித் சமுகத்தை சேர்ந்த பிரனே குமார் என்பவரை ஆணவக்கொலை விவகாரத்தில் தெலங்கான முதல்வர் மவுனம் காப்பதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. தலித் அமைப்புகள் சந்திரசேகரராவை கடுமையாக விமர்சித்து வருகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

பிரனே குமாரை கொலை  செய்ய கூலிப்படையை ஏவிய மாருதிராவ்  தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்  என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல்வர் சந்திரசேகர ராவ் இந்த விஷயத்தில் மவுனம் காப்பதாக கூறப்படுகிறது.

தெலங்கானா மாநிலம் மிர்யாபூர் நகரை சேர்ந்தவர் பிரனே குமார். தலித் சமுகத்தை சேர்ந்த இவர் உயர் சமூகத்தைச் சேர்ந்த அம்ருத்தா வர்ஷினி என்ற பெண்ணை, அவரது பெற்றோர்களின் எதிர்ப்புடன் கடந்த ஜனவரி  மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.  தற்போது பிரனே பிரனே 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த தம்பதிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவிட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துக் கொன்டிருந்தபோது,  அவர்களை பின் தொடர்ந்து வந்த  நபர், பிரனேவை பின்னாளில் இருந்து  வெட்டுக்கத்தியால் கொடுரமாகக் வெட்டி  கொலை செய்தார்.

இந்தச் சம்பவம், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங் களில் வைரலானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது கணவரை கொலை செய்ய, தந்தை மாருதி ராவ் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாக, அம்ருத்தா போலீஸாரிடம் கூறியிருந்தார்.

பிரனே குமார் – அம்ருத்தா

இதுதொடர்பாக  ‘ஆணவக் கொலை’ எ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,  அம்ருத்தாவின் தந்தை மாருதி ராவ், அவர் சகோதரர் ஷர்வன்  மற்றும் நண்பர் கரீமை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதான குற்றவாளியாக டி.ஆர். மாருதி ராவை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்று நீக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள தலித் அமைப்புகள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. மாநில  பகுஜனா பிரதிகாதனா வேதிக கட்சி ஒருங்கிணைப்பாளர்  சுஜாதா சூரப்பள்ளி, முதல்வர் சந்திரசேகராவ்,  சாதி பார்த்து நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் மாநிலத்தில் உள்ள பல சமூக அமைப்புகளும் இந்த விஷயத்தில் சந்திரசேகரராவ் மவுனம் காத்து வருகிறார் என்றும்,   “கே.சி.ஆர் ஆட்சியின் கீழ் தெலுங்கானாவில் தலித்துகளுக்கு எதிராக சாதி வன்முறை வெடித்துள்ளது என்றும் கூறி உள்ளனர்.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் முதல்வர் சந்திரசேகராவின் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆணவக்கொல சம்பவத்தை மாற்று கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றன.