புதுடெல்லி:
மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவிக்கு அழகல்ல என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
குஜராத், பீகார், உ,பி போன்ற மாநிலங்களில் தலித்கள் தாக்கப்பட்டதும், அதன் காரணமாக அங்கு தலித் மக்கள் போராட்டம் நடத்தியதும் அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றம் நடைபெற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
தலித் மீதான தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரத்சிங் சோலங்கி   பிரதமர் மோடி
பாரத்சிங் சோலங்கி   –  பிரதமர் மோடி

நாட்டில் நடைபெற்று வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றி பாரத பிரதமர்  மவுனம் சாதிப்பதாகவும், அவரது மவுனம் பிரதமர் பதவியை களங்கப்படுத்துவதுபோல் உள்ளதாகவும் குஜராத் மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பாரத்சிங் சோலங்கி விமர்சித்து உள்ளார்.
பிரதமர் மோடி குறித்து அவர் பேசியது:  மோடி குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆகியுள்ளார்.  ஆனால் குஜராத்தில் நடைபெற்ற தலித்கள்மீதான தாக்குதலுக்காக, அந்த  மக்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட பேச மறுக்கிறார்.  தலித்துக்காக பேசினால் அது  குஜராத் மாநில பா.ஜ.க.வை பாதிக்கும் என்று அச்சப்படுகிறார்.
பிரதமர் மோடியின் இந்த செயல், ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதோடு, பிரதமர் பதவியையும் களங்கப்படுத்துகிறது.
தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை குஜராத் அரசு ஒடுக்குகிறது. குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் மற்றும் ஏழை குடி மக்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. தலித் விரோத போக்கினை குஜராத் அரசு கொண்டுள்ளது, இது களையப்பட வேண்டும்  என்று கூறினார்.