வாணியம்பாடி:
ம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் எடுத்துச்சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ, புகைப்படம் வைரலாகி பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதுபோல செருப்பு பிரச்சினையில் சிக்கி அது அரசியலாக்கப்பட்டு, அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், திமுக எம்எல்ஏவும் பகிரங்கமாக மன்னிப்பு கோருவாரா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
திருப்பத்துார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஆம்பூர் அருகே உள்ள  பொன்னப்பள்ளி  கிராமத்தில்  சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி பார்வையிட்டார். அந்த பகுதி தண்ணீரால் சேறும் சகதியாயுமா இருந்தால், தனது செருப்பை கழற்றி விட்டு வெறும் காலில் நடந்துசென்று பார்வையிட்டார்.
அவரது செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகியான  வெங்கடசமுத்திரம் ஊராட்சியின்  தி.மு.க செயலராக இருக்கும் சங்கர் என்பவர்  தனது கையில் துாக்கியப் படியே உடன் செல்கிறார். இவர்களுடன் மேலும் சிலரும் செல்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமூக நீதி பேசுகின்ற  தி.மு.கவின் உண்மையான முகம் இதுதானா? என்று  விமர்சனங்கள்  எழுந்து வருகின்றன.
சமீப காலமாக திமுகவினர்  ஜாதிய ரீதியிலான அரசியல் பேசி வருவதும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நீதிபதிகள் நியமனம் குறித்த ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறனின் கருத்து போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுக எம்எல்ஏவின் செருப்பு சுமக்கப்பட்ட விவகாரமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், திமுக  எம்.எல்.ஏ., வில்வநாதனோ, தான் தற்போது வரை யாரிடமும் ஜாதி பார்த்து பழகியது கிடையாது. என் வளர்ச்சியை பிடிக்காத யாரோ சிலர் பிரச்னையை பெரிதுபடுத்த பார்க்கின்றனர் என்று  புலம்புகிறார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ஏற்கனவே கடந்த ஆண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோயில் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்க நிகழ்ச்சியின்போது,  அவரது  செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. பெல்ட் போட்ட செருப்பினை அமைச்சர் அணிந்திருந்தார். அப்போது தனது செருப்பின் பெல்ட்டை கழற்றிவிடுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார். செருப்பு பெல்ட் அந்த சிறுவனும், செருப்பின் பெல்ட்டை மட்டும் கழற்றிவிட்டான். இது தொடர்பாக புகைப்படம் வைரலான நிலையில், அதை திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். அதையடுத்து, அந்த சிறுவனிடம் அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
அதுபோல, திமுக தலைமையும், எம்எல்ஏ புகழேந்தியை பகிரங்கமாக மன்னிப்பு கோரச் சொல்லுமான என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் விவகாரம் போல இதிலும் மவுனம் சாதிக்குமா திமுக தலைமை…

வனத்துறைஅமைச்சர் சீனிவாசன்: பழங்குடியின சிறுவன் மூலம் தனது செருப்பை கழற்ற வைத்த கொடுமை…