மாம்பழம் சாப்பிட்டதால் தலித் பெண் அடித்துக் கொலை

ஃபதேபூர். உத்திரப் பிரதேசம்

த்திரப்பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் தலித் பெண் கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்து உண்டதற்காக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்/

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஃபதேபூர் ஆகும்.   அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருபவர் ராணி தேவி என்னும் பெண்.  இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.   இவர் கால்நடைகளை மேய்ப்பவர் ஆவார்.

இவர் ஒரு மாந்தோப்புக்குள் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார்.   அப்போது அங்கு ஒரு மாம்பழம் கீழே விழுந்துள்ளதைக் கண்டுள்ளார்.    அவருக்கு அப்போது மிகவும் பசியாக இருந்ததாலோ அல்லது மாம்பழ ஆசையாலோ அந்த மாம்பழத்தை எடுத்து உண்ணத் தொடங்கி இருக்கிறார்.

இதை அந்த தோப்பின் உரிமையாளர் பார்த்துள்ளார்.   அவர் ஓடி வந்து கீழே கிடந்த மாம்பழத்தை நீ எப்படி உண்ண்லாம் என சத்தம் போட்டுள்ளார்.  பயந்து போன ராணி தேவியால் பதில் சொல்ல முடியவில்லை.   அதனால் மேலும் ஆத்திரமடைந்த தோப்பின் உரிமையாளர் அவரை அடித்து உதைத்துள்ளார்.

எப்படியோ சமாளித்து தனது இல்லத்துக்கு வந்த ராணி தேவி அங்கு மயங்கி கீழே விழுந்து விட்டார்.   அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   அவரை அந்த மருத்துவமனை மருத்துவர்கள் கான்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சொல்லி உள்ளனர்.

ஆனால் கான்பூருக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் ராணி தேவி இறந்து விட்டார்.   இது அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.   தகவல் அறிந்த தோப்பு உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

You may have missed