நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா உள்ள ஒலக்குடி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குருமூர்த்தி மற்றும் வன்னியர் வகுப்பைத் சேர்ந்த சரண்யாவும் காதலித்து வந்தனர். குருமூர்த்தி கட்டிடத் தொழிலாளி மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ. உறுப்பினர்.

DALITH KILLIN 1
பிணமாய்த் தொங்கும் குருமூர்த்தி- சரண்யா காதல் ஜோடி.இருவரின் கால்கள் தரைக்கு மிக அருகில் இருப்பதாலும், குருமூர்த்தியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளதாலும் இது படுகொலை தான் என ஒலக்குடி மக்கள் கூறுகின்றனர்.

பெற்றோர்  தம்மைப் பிரித்துவிடுவார்கள் என அஞ்சி இருவரும் கடந்த 16 தேதி இருவரும் ஊரைவிட்டு ஓடியதாகக் கூறப்படுகின்றது.
dalith killing 2
சரண்யாவின் தந்தை தன் மகளைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில்,ஏப்ரல்  20 தேதி, ஒலக்குடியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆத்துப்பாக்கம் கிராமத்தில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அருகிலுள்ள புதர்களில் தேடிய போது, அங்கு ஒரு மரத்தில் இருவரும் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டனர்.
போலிசார் அந்தச் சடலங்களை அடையாளம் கண்டு அது குருமூர்த்தி சரண்யா தான் என உறுதிப்படுத்தினர்.
ஒலக்குடியைச் சேந்த மக்கள்,  காதல்ர்கள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்கின்றனர் என நினைத்துக்கொண்டு இருந்த வேளையில் இத்தகைய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவர்களது உடல், பொறையார் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தக் கொலை குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குருமூர்த்தியின் தாய், தம்முடைய மூத்த மகன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு  மௌனம் காக்கின்றார்.
 
தமிகழத்தில் தன் மகனை முதல்வராக்க ராமதாஸ் கையில் எடுத்த ஆயுதமான “சாதிவெறி” இன்னும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கி உள்ளது.
anbumani.com
Ramadoss pmk
நன்றி: விஜயேந்திரன், வி.சி.க. ஆசைத்தம்பி, அரும்பாக்கம் , பூம்புகார். மற்றும் ஜோஸ்வா