தலித்களுக்கு பாதுகாப்பில்லை: மாயாவதி எம்.பி. பதவி ராஜினாமா ஏற்பு!

டில்லி,

லித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து, பேச முடியவில்லை என்று தனது பதவியை ராஜினாமா செய்தாவார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி.

அதைத்தொடர்ந்து தனது ராஜினாமாவை சபை தலைவருக்கு அனுப்பினர்.

இந்நிலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபா தலைவர் அறிவித்துள்ளார்.

நேற்றைய சபை  கூட்டத்தின்போது பேசிய மாயாவதி,  பாரதியஜனதா அரசு பதவியேற்றபிறகு நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி பேசினார்.

பசு பாதுகாலர்கள் என்ற பெயரால் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்றும், தான் தலித்தாக இருந்தும்,  என இன மக்களுக்கு என்னால் எந்தவித உதவியும் செய்ய முடியாத நிலையில், தனக்கு இந்த பதவி தேவையில்லை என்று கூறி உள்ளார்.

குறிப்பாக பாரதியஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அதுகுறித்து மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டி உள்ள மம்தா,

மோடி அரசு தலித்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்றும் கூறி தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ராஜ்ய சபா தலைவர் அறிவித்து உள்ளார்.