அகமதாபாத்;

நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது இந்து தெய்வங்களின் புகழ் பாடும் நடன நிகழ்ச்சிகள் வடமாநிலங்களில் பரவலாக நடக்கும். இந்த வகையில் குஜராத் மாநிலத்திலும் ஆங்காங்கே நடந்தது. இதில் புதுவிதமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ராம்புரா கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பேத்கர் நடன நிகழ்ச்சி நடந்தது.

இதில் நூறு தலித் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. இதை அம்பேத்கர் கார்பா (நடனம்) என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் திருவுருவப் படம் அலங்கரித்து மாலை அணிவித்து மலர்கள் தூவப்பட்டது.

இந்நிகழ்ச்சியை கானு சுமேசரா மங்கலாபாய் என்ற 38 வயது இளைஞர் ஏற்பாடு செய்தார். இவர் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘குஜராத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி நடப்பது இது தான் முதன்முறை. ஆண் தெய்வம், பெண் தெய்வங்களை வழிபடுவதை தவிர்த்து அம்பேத்கரை வழிபட வேண்டும் என்று தலித் மக்களை சமாதானம் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு 5 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் திரைப்பட பாடலான ‘ஜெய் சந்தோஷி மாதா’ பாடல் இதற்காக மாற்றி அமை க்கப்பட்டது. அம்பேத்கர் சாஹிப் கி..ஜெய்…, ஜெய்.. அம்பேத்கர் பாபா…, ஜெய்.., ஜெய்.., ஜெய் என்று பாடல் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது தலித் இளைஞர்கள் மீது கடந்த வாரத்தில் தொடர் தாக்குதல் நடந்தது. ஒரு கோவிலில் நடந்த நடன நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த ஆனந்த என்ற தலித் இளைஞர் உயர் சமுதாய மக்களால் அடித்து கொல்லப்பட்டார்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், கடந்த 3ம் தேதி காந்திநகர் கிராமத்தில் தலித் சிறுவன் விளையாட்டு மீசை வைத்திருந்ததற்காக தாக்கப்பட்டான். இந்த பகுதியில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும். உயர் சமுதாயத்தினர் ஆதிக்கம் உள்ள ஒரு கிராமத்தில் அம்பேத்கர் நடனம் நடத்துவது என்பது கடினமான விஷயமாகும்.

நான் முதலில் இந்த ஆலோசனையை கூறிய போது யாரும் ஏற்கவில்லை. நவராத்திரி அன்று தெய்வங்களை தான் வழிபடுவது வழக்கம் என்றனர். தெய்வங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நம் கிராமத்தில் நவராத்திரி விழாவில் உயர் சமுதாயத்தினருடன் நடனம் ஆட அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை எடுத்துக் கூறி அவர்களுக்கு புரியவைத்தேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘அம்பேத்கர் தான் எங்களை மேம்படுத்தினார். அதனால் அவரை தான் ம க்கள் வழிபட வேண்டும். அவரை விடுத்து சிலைகளை வணங்குவதில் என்ன பயன் என்று நான் நினைத்தேன். இந்த நடன நிகழ்ச்சியில் அம்பேத்கரின் மதிப்பு மற்றும் அவரது சிந்தனைகளை கொண்டு பாடல்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.

தலித் போராளி ஹேமந்த் சவுகான் மற்றும் தசரத் சால்வி ஆகியோரது பாடல்கள் இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்தேன். ஜாதி பிரிவினையை ஒழிக்க வேண்டும். உரிமைக்காக போராட வேண்டும் என்று அந்த பாடல்களில் குறிப்பிடப்படுகிறது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோயிதியா கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் வினோத் சவுதா என்பவர் கூறுகையில், ‘‘ இந்த நிகழ்ச்சி ஒரு சொந்த வழியில் ஏற்பட்ட புரட்சியாகும். கிராமத்தின் படித்த இளைஞர்கள் இந்த ஆலோசனையை விரும்பினர். எங்களது சமுதாயத்தின் மீது அதிக வெறுப்புகள் உள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் அம்பேத்கர் எங்களுக்காக எப்படி போராடினார் என்பதை எடுத்து காட் டுவதற்காக நடத்தப்பட்டது. இதை ஆண்டுதோறும் நடத்தினால் அம்பேத்கரின் சிந்தனைகளை மக்கள் மற க்கமாட்டார்கள்’’ என்றார்.