அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது இங்கிலாந்து அணி. 134 ரன்களுக்கு 9 க்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மென்கள் ஏமாற்றிய நிலையில், டாம் லாரன்ஸ் ஆறுதல அரைசதம் அடித்து ஆடிவருகிறார். அவருடன் ஜேக் லீச் ஜோடி சேர்ந்து சிறிதுநேரம் தாக்குப் பிடித்தார். ஆனால், அவரும் அஸ்வின் பந்தில் 2 ரன்களுக்கு வெளியேறினார்.

மொத்தம் 93 பந்துகளை சந்தித்த லாரன்ஸ் 6 பவுண்டரிகள் உதவியுடன் 50 ரன்களை அடித்தார். கூடுதலாக இதுவரை 12 ரன்கள் கிடைத்துள்ளன.

இந்தியா சார்பில் அக்ஸார் படேல் 5 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன.