காஞ்சிபுரம் அருகே சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை சரி செய்யப்பட்டு மீண்டும் திறப்பு!

சென்னை:

காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை உடனே சீர் செய்யப்பட்டு இன்று மீண்டும் திறங்ககப்பட்டுள்ளது. இதற்கு திகவினர் உள்பல பலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

ரஜினியின் பெரியார் குறித்த பேச்சைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் குறித்த சர்ச்சைகள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டை பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை நேற்று முன்தினம் நள்ளிரவு  மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இதை நேற்று காலை பார்த்த அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் காட்டூத்தீயாக பரவிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடதுக்கு வந்த காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், சேதப்படுத்தப்பட் பெரியார் சிலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பெரியார் போன்ற  தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், உடைக்கப்பட்ட பெரியார் சிலை சரி செய்யப்பட்டு, வர்ணம் பூசி புதிய சிலை போல அமைக்கப்பட்டு,  மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த திராவிடர் கழகம் உள்பட பல கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.