ஒடிடியில் வெளியான படம் பார்த்து நடன இயக்குனருக்கு பாராட்டு..

மிழில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. இவரும் கமல்ஹாசனின் நடித்த உத்தம வில்லன், விஜய் நடித்த பிகில், விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே என பல படங் களுக்கு நடனம் அமைத்திருக்கிறார். பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் லலிதா ஷோபி.


அவர் கூறும்போது,’`சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினேன். இதில் ஜெயசூர்யா, அதிதிராவ், தேவ் மோகன் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். நரணிபுழா ஷான வாஸ் இயக்கி உள்ளார். இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியா னது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன் எனக்கு சிறப்பாக நடனம் அமைத்திருப்பதாக பாரட்டுகள் வருகின்றன, இப்படத்தில் பணியாற்றியது மிகவும் பெருமையாக உள்ளது’ என கூறினார்.
,

You may have missed