விஸ்வாசம் படப்பிடிப்பில் டான்சர் மரணம்: நடிகர் அஜித் நிதிஉதவி

டிகர் அஜீத் நடித்துவரும்  ’விஸ்வாசம்’  படத்தின்  படப்பிடிப்பின் போது நடனக் குழுவில் இருந்த டான்ஸர் ஒருவர் மரணமடைந்தர்.  இந்த சம்பவம் அஜித் உள்பட  படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  அவரது குடும்பத்துக்கு நடிகர் அஜித் நிதி உதவி செய்துள்ளார்.

வீரம், விவேகம், வேதாளம் உள்பட 3  படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கத்தி நடிகர் அஜித் நடித்து வரும் 4வது படம் விஸ்வாசம்.  இதில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகி  அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி  உள்ளது. இந்த நிலையில் ஒரு பாடல் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், அதற்கான படப்பிடிப்பு நடைபெற்ற வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  படப்பிடிப்பின் போது அஜித்துடன் நடனம் ஆடிய குரூப் டான்ஸர்களில் ஒருவ ரான சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானார். இதையடுத்து அவரை உடனடி யாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.

இதையறிந்த அஜீத் மிகுந்த சோகமடைந்தார்.  சரவணனின் உடலை சைதாப்பேட்டை எடுத்து வரும்வரை அனைத்து செலவுகளையும் ஏற்க அஜீத், சைதாப்பேட்டையில் நடைபெற்ற சரவணனின்  இறுதிச் சடங்கிலும் பங்கேற்று,  சரவணனின் குடும்பத்திற்கு அஜித், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்துள்ளார்.

அஜித்தின் இந்த உதவியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.