டங்கல் இந்திப் படத்தின் உலக சாதனை
மும்பை
ரூ 1930 கோடி வசூலுடன் ($301 மில்லியன்) டங்கல் திரைப்படம் உலகில் அதிக வசூல் ஈட்டிய ஆங்கிலம் அல்லாத படங்களில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
இந்தப் படம் டாலர் மதிப்பில் 301 மில்லியன் வசூலை எட்டியுள்ளது.
இந்தியாவில் மட்டும் $84.4 மில்லியன் வசூல் ஆகியுள்ளது
சீனப் படங்கள் இரண்டும், ஃப்ரன்ச் படம் ஒன்றும் ஜப்பான் படம் ஒன்றும் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
ஒரு தந்தை தன் மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக மிளிரச் செய்வதே டங்கல் படத்தின் கதை.
தந்தையாக அமீர்கான் நடித்துள்ளார்.