பருவநிலை மாற்றத்தால் இந்தியா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மிகப்பெரிய பாதிப்பை சந்திகும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். புவியின் வெப்பம் அதிகரித்தால் அதிகளவிலான உயிரிழப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

global-danger

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ” இன்டெர்-கவர்மண்டெல் பேனல் ஆன் கிலைமெட் சேஞ்ச்“ (ஐபிசிசி) என்ற அமைப்பு காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் புவிவெப்பமடைதல் அதிகரித்துள்ளதால் உலகின் வெப்பநிலை 2 டிகிரி அதிகரிக்கும் என்று கண்டறியபட்டுள்ளது.

மேலும் ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் இந்தியாவை மிகமோசமான வெப்பம் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்தால் இந்தியா மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும், பலர் உயிரிழக்கக்கூடும் எனவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

global

மேலும் மலேரிய, டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் தாக்கக்கூடும். இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வெப்பம் அதிகரிப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். தண்ணீர் இல்லாமல், வறட்சி, விளைச்சல் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய அழிவு ஏற்படும்.

இதுமட்டுமின்றி பெரிய அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. உணவு பொருட்கள் விலை உயரும். மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். வாழ்வாதார இழப்பு, உடல்நிலை பாதிப்புக்கள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்தால் பாதிப்பு மிக அதிகமாகவே இருக்கும். உலக அளவில் 35 கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.

இந்த பாதிப்பு அதிகளவில் ஆசிய நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானை தாக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை குறிப்பிட்டு சொன்னால் கொல்கத்த, கராச்சி உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைய கூடும். இதன் காரணமாக 2500 பேர் உயிரிழக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.