ஆபத்தான காற்றுமாசு சென்னையில் காற்று மாசு மிக அதிகம்!

யுளைக் குறைக்கும் காற்று மாசு, சென்னை மாநகரில் மிக அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

டில்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற அமைப்பு நாடு முழுதும் 14 முக்கிய நகரங்களில் காற்றுமாசு குறித்து ஆய்வு நடத்தியது.

இவற்றில் மத்திய பிரதேச மாநிலம் போபால் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு காற்று மாசின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. விஜயவாடா, சண்டிகர், லக்னோ, கொச்சி ஆகியவை அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன. நாட்டின் தலைநகர் டில்லி மிக அதிக காற்று மாசுடன் இப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை இதற்கு முந்தைய இடத்தை.. அதாவது 13வது இடத்தைப் பெற்றுள்ளது.

பிற நகரங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சென்னையில், பேருந்து ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவது குறைவாக இருப்பதே காற்று மாசு அதிகமாக இருக்க காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, காற்றுமாசு  காரணமாக இந்தியர்களின் ஆயுள் 1.5 ஆண்டுகள் குறைகிறது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாடு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதில் 2.5 மைக்ரான்கள் அளவுக்கு குறைந்த அளவு துகள்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. .

இந்த துகள் மனிதர்களின் நுரையீரலுக்குள் சென்று மாரடைப்பு, பக்வாதம், சுவாச பிரச்னை உள்ளிட்ட வியாதிகளை உருவாக்கும்.  இந்த துகள்கள்   வாகனங்கள், நெருப்பு, தொழிற்சாலை கழிவுகளால் உருவாகிறது.

இதனால்,வங்கதேசத்தில் 1.87 ஆண்டுகள், எகிப்தில் 1.85 ஆண்டுகள், பாகிஸ்தானில் 1.56 ஆண்டுகள், சவுதியில் 1.48 ஆண்டுகள், நைஜீரியாவில் 1.28 ஆண்டுகள், சீனாவில் 1.25 ஆண்டுகள், இந்தியாவில் 1.53 ஆண்டுகளும் மனிதர்களின் வாழ்நாளில் குறைகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.