ருத்ரதாண்டவம் ஆடிய ஆண்டரே ரஸ்ஸலை காலி செய்தார் சாம் கர்ரன்..!

மும்பை: சென்னைக்கு எதிரான பெரிய சேஸிங்கில், ருத்ரதாண்டவம் ஆடிய கொல்கத்தாவின் ஆண்ட்ரே ரஸ்ஸலை, கிளீன் பெளல்டு ஆக்கினார் சாம் கர்ரன்.

தனது இரண்டாவது ‍ஓவரை வீசிய சாம் கர்ரன், இந்த முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். கொல்கத்தாவின் முக்கிய பேட்ஸ்மென்கள், மிக எளிதாக தங்களின் விக்கெட்டை இழந்த நேரத்தில், ரஸ்ஸல் விளாசு விளாசென்று விளாசிவிட்டார்.

மொத்தம் 22 பந்துகளை சந்தித்த அவர், 6 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன், 54 ரன்களை வெளுத்தார். இதில், 48 ரன்கள் ஓடாமல் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தினேஷ் கார்த்திக்குடன், பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். தினேஷ் கார்த்திக்கும் சற்று அதிரடியாக ஆடிவருகிறார். அவர், 18 பந்துகளில் 34 ரன்களை அடித்துள்ளார். அதில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள் அடக்கம்.