150 கோடி ரூபாய் வசூல் செய்த ‘தர்பார்’ என லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமும் தங்களுடைய படம் 4 நாட்களில் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-