ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினி ஆதித்ய அருணாச்சலம் என்ற ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அலெஸ்பாண்டியன்’ திரைப்படத்தை போல இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.