வருட இறுதிக்குள் சென்சாருக்கு விண்ணப்பிக்க ‘தர்பார்’ படக்குழு முடிவு….!

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி புதிய போஸ்டர் வெளியிட்டது படக்குழு.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறது. அதற்கு முன்னதாக, ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.

அதற்கு முன்னதாகவே வெளிநாடுகளுக்கு படத்தின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும். அதனால், இந்த வருட இறுதிக்குள்ளேயே சென்சாருக்கும் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.அப்பொழுது தான் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.