‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி , நயன்தாரா நடித்துவரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இந்நிலையில், நேற்றுடன் (மே 13) முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. எனவே, மும்பையில் இருந்து சென்னை திரும்பிவிட்டனர் படக்குழுவினர்.

தர்பார்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட வேண்டியவை என்பதால், இரண்டாம்கட்ட படப்பிடிப்பும் மும்பையிலேயே நடைபெறும் எனத் தெரிகிறது.