ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று அதிகாலை 4 மணி முதல் படம் திரையிடப்பட்டது. ஒருபுறம் திரையரங்கு முன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மறுபுறம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “தர்பார்” படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட ஆக நிலையில், முழுபடமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால், படக்குழு மற்றும் விநியோகஸ்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. படம் வெளியான சில மணிநேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இதை வெளியிட்டுள்ளது.