கொரோனா வார்டில் ‘தர்பார்’ திரைப்படம்…..!

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதற்காக திரைப்படம் யோகா ஆகிய வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நோயாளிகள் பலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதை தவிர்க்கவே இந்த புதிய ஏற்பாடு என கூறி வருகின்றனர் .