ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.

படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட…

ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களுக்கான இழப்பீட்டு தொகையை ரஜினிகாந்த பெற்றுத் தர வேண்டுமென விநியோகஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்காக 9 மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு இன்று மதியம் சென்றுள்ளனர். ஆனால் விநியோகஸ்தர்களை இன்று சந்திக்க முடியாது என்று திருப்பி விட்டதாக தகவல்.