போஸ்டர் சர்ச்சைக்கு பதிலளித்த வின்சிராஜ்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படம் தர்பார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2017ம் ஆண்டு அர்னால்டு நடிப்பில் வெளியான Killing Gunther என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒரு சில மாற்றங்கள் செய்து வெளியாகியுள்ளதாக தகவல் வெளியானது .

இது குறித்து தர்பார் படத்தின் போஸ்டர் டிசைனர் வின்சிராஜ் Killing Gunther படத்தின் போஸ்டரையும் , தர்பார் படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு வருத்தத்தை தருகிறது என்று கூறியிருந்தார் .

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு

‘மூன்று முகம்’ கண்ணாடி போட்ட ரஜினியுடன் சேர்த்து, அபாயம் லோகோ வடிவமைப்புடன் இணைந்து இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார் என்பது வின்சிராஜ் வெளியிட்ட புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி