ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறதா ரஜினியின் ‘தர்பார்’…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனிடையே, இந்தப் படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது. ஜனவரி 9-ம் தேதியே வெளியிட்டால் 2 வாரங்கள் வசூலை பார்க்கலாம் என களமிறங்கியுள்ளனர்.