‘தர்பார்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி 6 மணிக்கு ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கார்ட்டூன் கேலரி