கவர்னருக்கு எதிராக தர்ணா: நாராயணசாமிக்கு ஸ்டாலின் போனில் வாழ்த்து

சென்னை:

வர்னர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், புதுவை முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணியில் கவர்னர் மாளிகை எதிரே நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது போராட்டத்தின் காரணம் குறித்தும், போராட்டத்தின் தன்மை குறித்தும் கேட்டறிந்தவர்,   போராட்டம் வெற்றி பெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதேபோல் புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோரும் நாராயண சாமியை தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி