விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக பணியாற்றிய தாஸ் மரணம்….!

நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார்.

இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படும் இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பொதுவெளியில் ரசிகர்கள் திரண்டாலும் நடிகர்களை பாதுகாப்பாக கவனித்து கொண்ட தாஸ் மரணமடைந்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

இவரது மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நிவின் பாலி, மஞ்சு வாரியர் உட்பட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.