மும்பை: தனது 90 வயதை எட்டவுள்ள பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு ‘தேசத்தின் மகள்’ என்ற பட்டத்தை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 28ம் தேதி லதா மங்கேஷ்கருக்கு 90 வயது நிறைவடைகிறது. எனவே, அந்த நாளில் வைத்து அந்த கவுரவத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக கவிஞரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி ஒரு தனி பாடலை எழுதியுள்ளார். பிரதமர் மோடியும் லதா மங்கேஷ்கரின் விருப்பமான ரசிகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என் பெயர் அல்லது செயலின் மூலமாக யாரேனும் நன்மை அடைந்திருந்தால் நான் பாக்கியசாலி. நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்றைய இளம் பாடகர்களுக்கு தனித்துவம் மிக முக்கியம். என் பாடலையோ, முகமது ரஃபி ஐயாவின் பாடலையோ, கிஷோர் குமாரின் பாடலையோ அல்லது ஆஷா போஸ்லேவின் பாடலையோ நீங்கள் சிறப்பாக பாடலாம்.

ஆனால், தொடர்ந்து அதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் நீங்கள் சிறிதுகாலம்தான் கவனிக்கப்படுவீர்கள். உங்களின் தனித்தன்மையின் மீது கவனம் செலுத்துங்கள்” என்றார்.