நடிகையின் கல்யாணத்துக்கு 10 ஆயிரம் சதவீதம் ஆதரவு தந்த மகள்..

ரண்டு முறை விவாகரத்து செய்த நிலையில் நடிகை வனிதா 3வதாக திருமணம் செய்கிறார். டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி முறைப்படி மணக்கிறார். அதற்கான திருமண பத்திரிகையும் நெட்டில் வெளியாகி இருக்கிறது.

இந்த திருமணம் குறித்து வனிதாவின் மகள் ஜோவிகா தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
அவர் இதுபற்றி எழுதி இருப்பதாவது:
அம்மா, நான் உங்களை நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எப்போதும் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். எல்லாமே உன்னிடமிருந்துதான் நான் கற்றேன், 15 வருடமாக நான் உன்னுடன் சாதனையான வாழ்க்கை வாழ்கிறேன். வாழ்வில் பல இன்னல்களை இருவரும் சந்தித்திருக்கிறோம். உன் எண்ணப்படி நீ உன் வாழ்கையை வாழ உனக்கு உரிமை இருக்கிறது. அதற்கு என்னுடைய 10 ஆயிரம் சதவீத ஆதரவு அதற்கு உண்டு. உன்னைப்பற்றி எனக்கு தெரியும். நீ கடின உழைப்பாளி. விசுவாசமானவர். மற்றவர்களைப்போல் சந்தோஷமாக வாழ உனக்கும் உரிமை உள்ளது. இதை உன் மகளாகவும், உன் தோழியாகவும் சொல்கிறேன்
இவ்வாறு ஜோவிகா கூறி உள்ளார்.