வாட்ஸ்அப் மூலம் தாய்க்கு மகள் இறுதி அஞ்சலி

கமதாபாத்

குஜராத் பெண் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

அகமதாபாத் நகரை கணவருடன் வசிக்கும் ஒரு பெண் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.  அவரது தாயார் மற்றும் தந்தை ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பை அருகில் உள்ள மனோர் என்னும் சிற்றூரில் வசித்து வருகின்றனர்.   தந்தை தீரஜ் படேல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.   அவரது தாயார் நீரிபாய் படேலும் நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி இருந்துள்ளார்.

கடந்த வார இறுதியில் நீரிபாய் காலமானார்.   அவரது கிராமத்தினர் அகமதாபாத்தில் இருக்கும் மகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.   அந்தப் பெண் தாம் மிகவும் பிசியாக இருப்பதாகவும் தன்னால் வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.    அத்துடன் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் அந்த ஊர்க்காரர்களுடன் பேசிய அவர் இறந்த தனது தாயின் முகத்தை காட்ட சொல்லி இருக்கிறார்.

அவ்வாறு காட்டப்பட்ட தனது தாய்க்கு தனது இருப்பிடத்தில் இருந்தே இறுதி அஞ்சலி வணக்கத்தை அந்தப் பெண் செய்துள்ளார். அத்துடன் அவரது அஸ்தியை கொரியரில் தனக்கு அனுப்பும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.  கிராம மக்கள் நீரிபாய் உடலை தகனம் செய்து அஸ்தியை கொரியர் மூலம் மகளுக்கு அனுப்பி உள்ளனர்.