கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான மூன்றாவது  டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர், ரசிகர் ஒருவருடன் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறையை நோக்கி வார்னர் நடந்த போது,  அருகில் வந்த ரசிகர் ஒருவர் ஏதோ கூற வார்னர் ஆத்திரமடைந்தார். அந்த ரசிகருடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். இருவரும் பரஸ்பரம் திட்டிக்கொ  ண்டனர்.  பிறகு மைதான பாதுகாப்பு ஊழியர் தலையிட்டு அமைதிப்படுத்தினார்.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் எழுத்து பூர்வமாக புகார் அளித்தது.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் லீமேன் தெரிவித்ததாவது:

“அந்த ரசிகர் நடந்துகொண்ட விதம்,  செயல் அவமானகரமானது. இந்த தொடரில் டேவிட் வார்னர் மட்டுமல்ல மற்ற ஆஸ்திரேலிய வீரர்களிடமும் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள். வீரர்களின் குடும்பம் மற்றும் உறவினர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். இந்த டெஸ்ட் தொடரில் அதுபோன்று பல சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. இது குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்து இருக்கிறோம். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது  என்று பார்த்துவிட்டு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்” என்றார்.